இதுவரை பல ஆயிரக்கணக்காணவர்கள் கருத்தரிக்க வைத்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஐருஐ குழந்தைகளைக் கொடுத்த ளுஈ மருத்துவமனை தற்போது ளுஆ டெஸ்ட் டியூப் பேபி சென்டர் ஆரம்பித்து தனது சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
கருத்தரிப்பு இன்மை காரணங்களை அனுபவம் மிக்க மருத்துவர்கள் கண்டறிந்து நவீன தொழில்நுட்ப உதவியுடன், தரமான கருத்தரிப்பு சிகிச்சை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்,
ஒரு வருடம் தாம்பத்திய வாழ்வில் ( பெண்ணின் வயது 30க்கும் அதிகமாக இருந்தால் ஆறு மாத காலத்திலேயே) கருத்தரிக்கவில்லையெனில் அவர்களுக்கு பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பில் வெளிப்படுத்தப்படும் பலகோடி விந்துகளில் சில கர்ப்பபையை கடந்து கருக்குழாயில் நுழையும் சினைப்பையில் இருந்து வெளிப்படும் முட்டை கருக்குழாய் வழியாக வந்து விந்துவை சந்தித்து கருத்தரித்தல் நிகழ்கிறது. இந்த நிகழ்வு நடப்பதில் உள்ள பிரச்சனை மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது.
கருத்தரிப்பிற்க்காக காத்திருந்து பலன் இல்லாமல் வரும் தம்பதியருக்கு உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. அவர்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வகைப்படுத்தி சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.
பெண்ணுக்கு 3டி ஸ்கேன் மூலம் கர்ப்பப்பை, சினைப்பை பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.
இரத்த பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, விந்து பரிசோதனை மூலம் பிரச்சனைகள் ஆராயப்பட்டு மருத்துவர் குழு சிகிச்சை முறையை முடிவு செய்கிறது
கருமுட்டை வளர்ச்சிக்காக மாத்திரைகளும், ஹார்மோன் ஊசிகளும் கொடுக்கப்படுகிறது. கருமுட்டை வளர்ச்சி ஸ்கேன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முட்டை உடைய ஹார்மோன் ஊசி கொடுத்து 48 மணி நேரத்திற்குள் தயார் செய்யப்பட்ட விந்தணுக்கள் கர்ப்பப்பையின் உள்ளே செலுத்தப்படுகின்றது.
IVF செய்யப்படும் பெண்களுக்கு ஹார்மோன் மருந்துகள் மூலம் அதிகப்படியான முட்டைகள் உருவாக்கப்படுகிறது. கருமுட்டை முதிர்வதற்கு வேறு சில ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டு 36 மணி நேரம் கழித்து கருமுட்டைகள் சினைப்பையில் இருந்து ஸ்கேன் உதவியுடன் சிறு மயக்கம் கொடுத்து எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட கருமுட்டைகளுடன் தரமான வீரியமுள்ள விந்தணுக்கள் சேர்த்து பாதுகாப்பாக வைக்கப்படுகிறது சில மணி நேரத்தில் கருவின் தன்மை பரிசோதிக்கப்படும்.
மிக மிக குறைவான விந்தணுக்கள் உள்ளவர்களுக்கு ஒரு கருமுட்டையினுள் தரமான ஒரு விந்து செலுத்தப்பட்டு கருத்தரிக்க செய்யப்படுகிறது.
Embryo Transfer இப்படி உருவான கருக்கலில் தரமான கருக்கள் மட்டும் 3 முதல் 5 நாட்கள் இன்குபேட்டரில் பாதுகாக்கப்படும்.
பெண்ணின் கருப்பை உட்சுவர் (Endometrium) மருந்துகள் மூலம் தயார் செய்யப்பட்டு, ஸ்கேன் உதவியுடன் Embryo Blastocyst எனப்படும் கரு உள்ளே வைக்கப்படுகிறது.
மகளிர் மகப்பேறு & மகப்பேறின்மை சிறப்பு மருத்துவர்